கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் உள்ள இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் தமிழ் துறை சார்பாக இரு பெரும் விழாவாக தமிழினி சங்கத்தின் தொடக்க விழாவும் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது செயலர் அன்னை நிர்மலா ராணி அவர்கள் தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர் சுசிலா தேவி அவர்கள் முன்னிலையிலும் தமிழ் துறைத்தலைவர் ஒருங்கிணைப்பிலும் விழாவானது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வு இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதில் தமிழ்த்துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .மேலும் தமிழ் சார்ந்த கவிதைகளும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2023- 24-ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழினி சங்கத்தின் பொறுப்பாளர் திருமதி சிவகாமி அவர்கள் செயல்திட்ட அறிக்கையை வாசித்தார். இதனை தொடர்ந்து முனைவர் விஜயலட்சுமி அவர்கள் இவ்வாண்டிற்கான தமிழினி சங்கத்தின் பொறுப்பாளராக மீண்டும் திருமதி சிவகாமி அவர்கள் தமிழ்த்துறையின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதனை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழினி சங்கம் சார்ந்த பணிகளில் பங்கெடுக்க தமிழ்த்துறை மாணவியர்களுக்கும் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டிற்கான தமிழ்னி சங்கத்தின் செயல் திட்டங்களை அனைத்துத்துறை மாணவியர்களைக் கொண்டு சிறப்பாக செயல்படுத்திடவும் கருத்துக்களை வெளியிட்டார். சிறப்புரையாக கல்வி வளர்ச்சி நாள் குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் சுசிலா தேவி அவர்கள் பல்வேறு அரிய செய்திகளை மாணவியர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் இறுதியாக செல்வி நந்தினி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்வு முடிவு பெற்றது.