Latest News  

Form 3 Certificate Distribution Ceremony

Form 3 Certificate Distribution Ceremony

கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும்  இமாக்குலேட் மகளிர் கல்லூரியில் 16. 8 .24 இன்று FORM 3 சான்றிதழ் பெற்ற மாணவியர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் அன்னை முனைவர் மேரி நிர்மலா ராணி அவர்கள் தலைமையில் முதல்வர் முனைவர் சுசிலா தேவி மற்றும் மனித வள அலுவலர் முனைவர் சித்ரா அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வு  நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் ,இந்திரா காந்தி கால் பந்தாட்ட  அகாடமியின் செயலர் திரு மாரியப்பன் சுப்பிரமணியன் அவர்களும், ஓய்வூதிய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்  திரு. நடராஜன் அவர்களும் கலந்து கொண்டுனர். சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டு துறையின் பல்வேறு நிலைகளின் சிறப்பு அம்சங்களை பற்றிய தகவலையும்,   பார்ம் 3 சான்றிதழின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் விளக்கிக் கூறினர் . திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வழி 13 மாணவியர்கள் பெற்ற 16 FORM 3 சான்றிதழ்களை மாணவியர்களுக்கு வழங்கிபாராட்டுகளை தெரிவித்தனர்.

Online Fee