கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் உள்ள இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையின் தமிழினி சங்கத்தின் சார்பாக பெண்களின் வாழ்வியல் முன்னேற்றம் என்ற பொருண்மையில் 16.09.2024அன்று கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ்த்துறையின் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 23 8 2024 அன்று நடைபெற்ற YOUTH FOR A CHANGE என்ற தலைப்பில் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் அவர்களால் ஊக்குவித்தல் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட நல்ல பல கருத்துக்களை பிற மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பேராசிரியர் விஜியலட்சுமி மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர்கள் தொகுத்து வழங்கினர். இதில் பெண்களுக்கு இக்கால கட்டங்களில் ஏற்படுகின்ற வன்கொடுமைகள் குறித்த பல்வேறு கருத்துக்களை மாணவி சுவாதி அவர்கள் எடுத்துரைத்தார். மன உளவியல் சார்ந்த சிக்கல்களையும் அதனை தவிர்ப்பதற்கான காரணிகள் குறித்தும் மாணவி ஜெயசூர்யா அவர்கள் எடுத்துரைத்தார் . பேராசிரியர் முனைவர் கிரிஜா அவர்கள் இன்றைய சூழலில் மாணவியர்களுக்கு ஏற்படுகின்ற குழப்பங்களும் மன உளைச்சலும் குறித்து சிறந்த கருத்துக்களை மாணவியர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்விற்கு இடையே சிறு சிறு உடற்பயிற்சிகளை மாணவியர்கள் செய்து மன மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். இறுதியாக இன்றைய இளம் தலைமுறை எதிர்கால சமூகத்தின் ஆணிவேர் என்பதை முன்னிறுத்தி சிறப்புரையை பேராசிரியர் முனைவர் விஜியலட்சுமி அவர்கள் வழங்கினார். நல்ல பல கருத்துக்களை மாணவியர்கள் கேட்டு பயன் பெற்றனர்.