கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இமாக்குலேட் மகளிர் கல்லூரியில் 17/8/2024 அன்று L.S. துஃப்பிலி அடிகளாரின் 218 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலர் அன்னை முனைவர் நிர்மலா ராணி தலைமை வகித்தார் .முதல்வர் முனைவர் மு.சுசிலா தேவி அவர்கள் முன்னிலையிலும்,மனிதவள அலுவலர் முனைவர் ச.சித்ரா அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அருட் சகோதரி ஜான் பிரிட்டோ மேரி அன்னை அவர்கள் கலந்து கொண்டார். இறை வணக்கத்தோடு இவ்விழா இனிதே துவங்கியது.மாணவிகள் துஃப்பிலி அடிகளாரின் பெருமைகளை கூறும் பாடல்களுக்கு நடனமாடினர். சிறப்பு விருந்தினரான அருள் சகோதரி ஜான் பிரிட்டோ மேரி அன்னை அவர்கள் துஃப்பிலிஅடிகளார் பெண் கல்விக்காக அரும்பாடு பட்டவர் என்றும், பெண்களுக்கு கல்வி வழங்க இச்சபையை உருவாக்கினார் என்றும்,அவர் வாழ்ந்த 30 ஆண்டுகளில் 10 பள்ளிக்கல்லூரிகள் துஃப்பிலியடிகளால் உருவாக்கப்பட்டது என்றும் ,ஏழ்மையான மாணவிகளுக்காக பிரான்ஸ் நாட்டிற்கு கடிதம் எழுதி நிதியுதவி கேட்டு உதவி புரிந்தார் என்றும்,தியாகம்,விடாமுயற்சி,கடின உழைப்பு,எளிமை, தாராளகுணம் கொண்டவர் என்று துஃப்பிலி அடிகளாரின் உரிய பண்புகளை மாணவியர்களுக்கு எடுத்து கூறினார் .இறுதியாக கணினி அறிவியல் துறை பேராசிரியர் நன்றியுரை வழங்க, கல்லூரிபண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது