கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியும் கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தின விழா 17. 2 .2025 அன்று காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்சகோதரி நிர்மலா ராணி முன்னிலையிலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மூசிசிலா தேவி மற்றும் கடலூர் கோஸ்டல் லாட்டரி சங்கத்தின் தலைவர் செந்தில் பாரதி தலைமையிலும் விழா நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் தீபா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சொல்லும் பொருளும் என்ற தலைப்பில் தமிழாகரர் தரு.தெ.முருகசாமி அவர்களும், தமிழின் கொடை என்ற தலைப்பில் முனைவர் திரு.சிவ.மாதவன் அவர்களும் சிறப்புரையாற்றினார். விழா குழு தலைவர் Rtn ராமநாதன், Rtn.ஜெயக்குமார், வாழ்த்துரை வழங்கிய Rtn.மதியழகன், பொருளாளர் Rtn. விஜய் ஆனந்த் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.இனிய இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நாட்டுப்பண்ணுடன் இனிதே விழா நிறைவு பெற்றது.