கடலூர் சின்ன கங்கணாக்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி 19 .2 .2025 அன்று நடைபெற்றது இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மொழி சார்ந்த ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் . தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது.நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் இணை ப்பேராசிரியர் முனைவர் தமிழ் மொழி அவர்களும் குட் ஷெப்பர்ட் பள்ளியின் முன்னாள் முதல்வர் லூர்துசாமி அவர்களும் திருச்சியில் உள்ள எலியோரா கவுன்சிலிங் சைக்கோ தெரபி மையத்தின் நிறுவனர் மற்றும் மனநல மருத்துவர் திருமதி ஜாஸ்மின் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மொழி சார்ந்த பாடங்களை மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துச் சொல்லும் முறைமைகள் குறித்தும் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான மனஅழுத்தத்தை கையாளும் முறை குறித்தும் பல்வேறு அரிய செய்திகள் இப்பயிற்சியின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது செயலர் அன்னை தலைமையிலும் கல்லூரி முதல்வர் முன்னிலையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறைத்தலைவர்கள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்களும் மாணவியர்களும் பங்குக்கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக நாட்டுப் பண்ணுடன் இப்பயிற்சி நிறைவு பெற்றது.