Latest News  

Women's Day 2025

Women's Day 2025

கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் (08.03. 2025) இன்று காலை மகளிர் தின விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு செயலர் அன்னை  அருட்சகோதரி முனைவர் நிர்மலா ராணி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் மு.சுசிலா தேவி அவர்கள் முன்னிலையிலும்,மனிதவள அலுவலர் முனைவர் ச. சித்ரா அவர்களின் ஒருங்கிணைப்பிலும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அதிகாரி செல்வி.E.அபிநயா அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளிடம் பெண்கள் என்றும் துணிவோடு இருக்க வேண்டும் என்றும்,அரசு தேர்வில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் கூறினார்.மகளிர் தின விழாவினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில், ரத்தமாற்று அதிகாரி மற்றும் J.D அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் A. குமார் அவர்களும் ,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி திரு.K. கதிரவன் அவர்களும்,அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் இந்திரஜித் அவர்களும் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதர் அவர்களும்  கலந்து கொண்டு ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தனர் . பின்பு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கிய பேராசிரியர்களையும் மாணவிகளையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.