Latest News  

பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி

பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி

கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாக்குலேட் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 31.07.2025 அன்று தமிழினி சங்கம் "திருக்குறளின் வாழ்வியல் சிந்தனைகள்" என்ற பொருண்மையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி என்று அனைத்து துறை மாணவியர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வானது கல்லூரி செயலர் அன்னை அருட்சகோதரி முனைவர் மேரி நிர்மலா ராணி தலைமையிலும் முதல்வர் முனைவர்  மு.சுசிலாதேவி அவர்களின் முன்னிலையிலும்  தமிழ்த்துறை தலைவர் முனைவர் த.தீபா ஒருங்கிணைப்பில் தமிழினி சங்கத்தின் தலைவர் முனைவர் வீ.விஜியலட்சுமி போட்டிகளை இனிதே  நடத்தினார்.